மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார். ‘யுவா’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், ஸ்ரீதேவி பைரப்பா என்பவரை காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்து, குடும்ப நல நீதிமன்றத்தில் யுவராஜ்குமார் மனுதாக்கல் செய்துள்ளார்.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது யுவராஜ்குமாரின் வழக்கறிஞர் பிரசாத் சில பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். யுவராஜ்குமார் மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லக் கோரி மனு தாக்கல் செய்ததாக பிரசாத் கூறினார். அது 54 பக்க விவாகரத்து மனு.
ஸ்ரீதேவி பைரப்பா, ராதையா என்ற நபருடன் தகாத உறவு வைத்திருந்ததாக பிரசாத் குற்றம் சாட்டினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவராஜ் – ஸ்ரீதேவி உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு ராதையா திருமணம் செய்து கொண்டதால் ஸ்ரீதேவி மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் தான் தற்போது யுவராஜ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என்றார்.
யுவராஜ்குமார் தனது மனைவியை நெருங்க முயன்றபோதெல்லாம், பல் துலக்குவது, குளிப்பது போன்றவற்றை கூறி அவரை அவமானப்படுத்தியதாக பிரசாத் மேலும் குற்றம் சாட்டினார்.
ராதையாவைப் போல் யுவராஜ்குமாரினால் தன்னை திருப்திப்படுத்த முடியவில்லையென கூறி அவரை இழிவுபடுத்தினார். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ராதையாவின் வீட்டுக்குச் செல்வார். இதுவே அவர்களது உறவின் இயல்பு என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் ‘நடிகை சப்தமி கவுடாவால் தான் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது” என்று ஸ்ரீதேவி பைரப்பா கூறியியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் தொடர்பிருந்ததாகவும், இதனால் தான் மனம், உடல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
யுவராஜ்குமார் அனுப்பிய விவகாரத்து நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளதாக ஸ்ரீதேவி இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார். மே 30 அன்று தாக்கல் செய்யப்பட்ட அவரது பதிலின் விவரங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
யுவராஜ்குமார், சப்தமி கவுடாவுடன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக உறவில் இருப்பதாக பதிலில் கூறப்பட்டுள்ளது.
தாம்பத்திய வாழ்வில் மன, நிதி, உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அனைத்தையும் மீறி, குடும்ப நலன்களைப் பாதுகாப்பதற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டதாக ஸ்ரீதேவி குறிப்பிட்டுள்ளார்.
யுவராஜ் தனது சக நடிகையான சப்தமி கவுடாவுடன் ஒரு வருடமாக காதலித்து வருகிறார். டிசம்பர் 2023 இல், ஸ்ரீதேவி இந்தியா திரும்பியபோது, யுவராயும் சப்தமி கவுடாவும் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்த போது, நேரில் சென்று பிடித்துள்ளதார். இதனால் அவர் என்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயன்றார் என்று ஸ்ரீதேவி குற்றம் சாட்டினார்.
சப்தமி கவுடாவுடன் உறவைப் பேணி, இப்போது என்னை ஏமாற்றியதாக குற்றம் சாட்டி, யுவராஜ் தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முயற்சிக்கிறார், எந்த வருத்தமும் இல்லாமல் என் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறுகிறார் என ஸ்ரீதேவி பைரப்பா தனது வழக்கறிஞர் நோட்டீசுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டதை அடுத்து நடிகை சப்தமி கவுடா, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். ஸ்ரீதேவி என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக என் பெயரை தவறாகப் பயன்படுத்தி உள்ளார் என்று கூறியுள்ள சப்தமி கவுடா, இதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.