25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

கோட்டாவிடம் கார் வாங்கிய மொடல் அழகி எவ்வாறு இவ்வளவு பணம் சம்பாதித்தார்?: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

இலங்கையின் மொடல் அழகி பியுமி ஹன்ஸ்மாலி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, சந்தேகத்துக்கு இடமான வகையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைக்காக, நாட்டிலுள்ள 8 பிரதான வங்கிகளினால் பேணப்படும் 19 கணக்குகளின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன  உத்தரவிட்டுள்ளார்.

இரகசியப் பொலிஸின் சட்ட விரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின்  கோரிக்கைக்கு அமைய, மேற்படி உத்தரவுகள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சஞ்சய் மஹவத்த என்பவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜகருணா மற்றும் பிரதிப் பொலிஸ் பரிசோதகர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

கொழும்பு ஹில்டன் குடியிருப்பில் வசிக்கும் பியுமி ஹன்ஸ்மாலி ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியதுடன், கொழும்பில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 148 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டை வாங்கியுள்ளதுடன், எட்டு பெரிய வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை வைப்பிலிட்டுள்ளார். குறுகிய காலத்தில் இந்த சொத்துக்களை எப்படி சம்பாதித்தார் என்பது தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பணமோசடிச் சட்டத்தின் 6 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு, இரகசியப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதவான், வங்கிக் கணக்குப் பதிவேடுகளை சமர்பிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

Leave a Comment