25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

இந்திய துணைத்தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சக்கு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்று தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து தங.களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றை மீனவர் சங்கப் பிரதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எமது காணியை மோசடி செய்து விட்டார்கள்’: கிளிநொச்சி நபர் பரபரப்பு புகார்

Pagetamil

கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரின் சட்டவிரோத துப்பாக்கிச்சூடு… ரணில் வழங்கிய பணப்பரிசில்: சிஐடி புதிய விசாரணை!

Pagetamil

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment