நடிகைகள் மற்றும் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட்டு பணக்காரர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலுக்கு தலைமை தாங்கிய நடிகை ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் பாணந்துறை வலனையில் அமைந்துள்ள மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள், கிளப்களில் நடத்தப்படும் பார்ட்டிகளின் போது, பணக்காரர்களுக்கு குடிபோதையில் உல்லாசமாக இருப்பதற்காக அழகான விபச்சாரிகளை, திரைப்பட நடிகை ஒருவர் சப்ளை செய்வதாகவும், மொபைல் டாக்ஸி சேவைகள் மூலம் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையின் தலைமைப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்கவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகை மற்றும் பிற பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபச்சார மோசடிக்கு தலைமை தாங்கிய நடிகை சுமார் வயது வந்தோருக்கான 5 ஆபாசப்படங்களில் நடித்தவர் என்பதும் மேலும் பல டெலி நாடகங்களிலும் நடித்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி விபச்சாரத்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் சினிமா மற்றும் டெலி நாடக நடிகைகளை பணக்காரர்களுக்கு ரூ.45,000க்கு விற்பது விசாரணையில் தெரியவந்ததாக மத்திய ஊழல் தடுப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடிகைகளுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொழிலதிபர்களிடம் அவர் பேசிய பல ஓடியோ டேப்புகளையும் மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மோசடியை நடத்திய நடிகை மல்வானையில் வசிப்பவர் என்று மத்திய ஊழல் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நடிகை உள்ளிட்ட யுவதிகளை மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை முகவராக பாவித்து அழகிய நடிகையையும் அவரது குழுவினரையும் தந்திரமாக மொரகஹஹேன கோறளைம தெமடஹத்த பிரதேசத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளார். இந்த நடவடிக்கையின்போது, இளம் பெண்களை ரூ.30,000 இற்கு விற்பனை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் பயகம, அம்பாறை, பொரலஸ்கமுவ மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.
இந்த பெண்கள் வெளிநாட்டு மதுபானம் அருந்தியுள்ளனர் என்பதும், தொழிலதிபர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக நட்சத்திர ஹொட்டல் பார்ட்டிகளில் தொழிலதிபர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய நடிகை தொழிலதிபர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளதும், மீதமுள்ள நடிகைகளை தொழிலதிபர்களுக்கு விற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.