யாழ்ப்பாணத்தில் நடக்கும் மாட்டுத்திருட்டு இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் நடக்கும் செயல் என விபரீத காரணத்தை கண்டறிந்துள்ளனர் யாழ்ப்பாணத்திலுள்ள மதவாதக்குழுவான சிவசேனை.
இது தொடர்பில் அந்த குழு அனுப்பிவைத்துள்ள செய்தி வருமாறு-
மட்டுவிலில் காணாமல் போன மாடுகள். துன்னாலையில் முகமதியக் கள்வர் ஒளித்து வைத்திருந்தனர். சட்டங்களை மீறி இறைச்சிக்காக வெட்ட முயன்றனர்.
சாவகச்சேரிக் காவல் நிலையத்தார் விரைந்து செயல்பட்டனர். புலனாய்ந்தனர். துன்னாலைக்குச் சென்றனர் மாடுகளை மீட்டனர்.
முகமதியக் கள்வரைக் கைது செய்தனர். அக்கள்வரைச் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாக்கினர்.
பசுப் பாதுகாப்புச் சைவ மக்களின் கடமை. பசுவைப் பாதுகாக்கும் அரசைப் பாராட்டுவது சைவ மக்களின் கடமை. சவுதி அரேபியாவில், மேலும் பல முகமதிய நாடுகளில், பன்றி இறைச்சிக்குத் தடை. அங்கு பன்றி இறைச்சி விற்றால் தலையைக் கொய்வார்கள்.
தன் மகன் பசுக்கன்றைத் தேர்ச் சில்லால் கொன்றான் என்பதற்காகத் தன் மகனின் தலையைக் கொய்த எல்லாளனை மகாவமிசம் பாராட்டிக் கூறும்.
எனவே
அடியார் விபுலானந்தர்
சிவதொண்டர் சிறீந்திரன்
மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகிய மூவரும் சாவகச்சேரிக் காவல் நிலையம் சென்றோம்.
காவல் நிலையப் பொறுப்பாளரைப் பாராட்டினோம்.
400 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டிறைச்சிக்குத் தடை இருந்த மண்ணில், மேலாதிக்க ஆளுநர் இறைச்சிக்காக மாட்டைக் கேட்கிறார் என்பதற்காகவே இந்தியாவிற்குத் தப்பியோடிய ஞானப்பிரகாசர் போன்ற சைவப் பெருமக்கள் வாழ்ந்த சிவ பூமியில், இந்துக்கள் மீது வெறுப்பைக் கக்குவதற்காக, இந்துக்களைத் தூண்டுவதற்காக, இன முரண்பாட்டை வளர்ப்பதற்காக, இன மோதலை ஊதுவதற்காக, முகமதியர் இவ்வாறு திட்டமிட்டே மாடுகளை இறைச்சிக்காகக் களவெடுக்கின்றனர் என்பதைக் காவல் துறைப் பொறுப்பாளரிடம் கூறினோம்.