24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
கிழக்கு

வாகரையில் கவனயீர்ப்பு போராட்டம்!

வாகரையில் மேற்கொள்ளப்படவிருக்கும் இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பாக பயணாளிகளைத் தெரிவு செய்யும் நேர்முகப் தேர்வினை நிறுத்துமாறு கோரி இன்று காலை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

இதனை வாகரை பிரதேச மீனவர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், ஆலய அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன ஒன்றினைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பயனாளிகளை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு இன்று காலை 9 மணியளவில் உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவ்விடத்திற்கு சென்ற எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு பொருத்தமற்ற, மக்கள் விரும்பாத இவ் நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டாம் என தெரிவித்தனர்.

உதவி மாவட்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரியான அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் இதனை நிறுத்தாமல் நேர்முகப் தேர்வினை நடாத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பயனாளிகள் தெரிவு தொடர்பான நேர்முகத் தேர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி இன்று இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டப்பட்டதாக உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.

இவ் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் தமது  கோரிக்கையை முன் வைத்து கண்டித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

அவிபிருத்தி என்ற போர்வையில் வளங்களை அழிக்காதே, வாகரை மக்களின் வாழ்வாதாரததை அழிக்காதே, ஆளுநரே மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளி, அழிவுகரமான இறால் வளர்ப்பை நிறுத்து, சூழலை அழிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண அளுநர் மற்றும் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

வாகரை பிரதேசத்தில் சுமார் 1500 ற்கும் மேற்பட்ட களப்பு காணிப் பரப்பில் இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு கடந்த பல வருடங்களாக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகிறது. பிரதேச மக்கள் விரும்பாத குறித்த திட்டத்தை நிறுத்துமாறு கோரி பல முறை கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தபோதிலும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்டத்தினை பிரதிநிதிதிதுவப் படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொள்வதாகவில்லை என கவலை வெளியிட்டனர்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு

east tamil

திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்

east tamil

கன்னியாவில் அபரக்கிரியைகளுக்கான அனுமதி

east tamil

திருகோணமலையில் ஆலய விக்கிரகங்கள் திருட்டு

east tamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

Leave a Comment