பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இன்று (12) இந்த சம்பவம் நடந்தது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் பிரேம்குமார் கிரிசாந் (30) என்பவரே உயிரை மாய்த்துள்ளார். சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்தது.
கொழும்பை சேர்ந்த இவர், காதல் விவகாரத்தினால் உயிரை மாய்த்துள்ளார் என கருதப்படுகிறது. அவரது காதலியென கருதப்படும் யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையெடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது, வைத்தியர் சடலமாக காணப்பட்டார்.
அவரது மூக்கிற்குள் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தது. அவர் ஏதோ ஒரு வகை மருந்தை செலுத்தி உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2