24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

குடும்பத்தினரின் மூட நம்பிக்கையால் தள்ளிப்போன திருமணம்… மயக்க மருந்தை செலுத்தி வைத்தியர் தற்கொலை: பருத்தித்துறை வைத்தியசலையில் நடந்த துயரச்சம்பவம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இன்று (12) இந்த சம்பவம் நடந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் பிரேமேந்திரராஜா கிரிசாந் (30) என்பவரே உயிரை மாய்த்துள்ளார். இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வருகின்றனர். குடும்பத்தினரின் மூட நம்பிக்கையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செல்வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், குடும்பத்தில் ஒரே மகனாவார். நேபாளத்தில் மருத்துவ கல்வியை முடித்துள்ளார். கடந்த 7 வருடங்களுக்கு மேலாக, காதல் தொடர்பில் இருந்து வருகிறார். அவரது காதலியும் வைத்தியராவார்.

உயிரை மாய்த்த வைத்தியரின் ஜாதகப்படி இப்போதைக்கு திருமணம் செய்யக்கூடாதென தாயார் தடுத்து வந்ததாகவும், மேலும் 3 வருடங்களின் பின்னரே திருமணம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், உடனடியாக திருமணம் செய்ய காதலி விரும்பியிருந்தார்.

இந்த மனஅழுத்தத்திலிருந்தவர் இன்று உயிரை மாய்த்துள்ளார்.

வைத்தியர்களின் தங்கும் விடுதி அறைக்குள், மயக்க மருந்தை தனது கால் விரல்களுக்குள் செலுத்தி விட்டு, அறையை பூட்டிவிட்டு படுத்துள்ளார்.

அவர் கடந்த சில நாட்களின் முன்னரே, சத்திரசிகிச்சைக்கூடத்தில் மயக்க மருந்து செலுத்துவது குறித்து, தொடர்புடைய வைத்தியர்களிடம் நுணுக்கமாக கேட்டறிந்துள்ளார்.

அவரது தங்கும் விடுதிக்குள் மயக்க மருந்து போத்தலின் மூடி என கருதப்படும் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. எனினும், மருந்து போத்தல் காணப்படவில்லை. தற்கொலைக்கு முன்னதாக வைத்தியர் அதை மறைத்திருக்கலாமென கருதப்படுகிறது.

தற்கொலைக்கு முன்னதாக, வைத்தியர் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதையடுத்து, காதலி பருத்தித்துறை ஆதார வைத்தியசலையிலுள்ள மூத்த வைத்தியரொருவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். எனினும், அறிமுகமற்ற இலக்கத்திலிருந்து வந்த அழைப்பென்பதால் அந்த வைத்தியர், அந்த அழைப்பு குறித்து அக்கறை காண்பிக்கவில்லை. சற்று நேரத்தின் பின்னரே, அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது, தற்கொலை விவகாரத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்தியரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வைத்தியரின் தங்கும் விடுதிக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்தியர் படுக்கையில் காணப்பட்டார். பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதற்குள் வைத்தியர் உயிரிழந்திருந்தார்.

வைத்தியரின் அருகில் திறந்த நிலையில் பேனா ஒன்றும் காணப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment