பைரவா படத்தில் சிறுவேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர் விஷ்ணு விஷாலின் ராட்ச்சன் படத்தின் அம்மு பாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்து, அம்மு அபிராமி என்று அழைக்கப்படுகிறார்.
தொடர்ந்து, இவர் நடித்த அசுரன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அம்மு அபிராமி.
இவர் நடிப்பில் முன்னதாக வெளியான கண்ணகி, ஹாட்ஸ்பாட் படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இவர் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திபனை நடிகை அம்மு அபிராமி காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகை அம்மு அபிராமி தனது இன்ஸ்டாகிராமில், “பிறந்த நாள் வாழ்த்துகள் டியர், பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம் அம்மு அபிராமி, குக் வித் கோமாளி இயக்குநர் பார்த்திபனை காதலிப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இவர்களது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் தங்களது வாழ்த்துகளையும் இருவருக்கும் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களை இயக்கியவர் பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது.