சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒப்பனை சிகிச்சைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகமயப்படுத்தப்படுவதனால் பாரிய பொது சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (10) வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் இரசாயன கலவை மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை பரிசோதிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையிடம் போதிய ஆய்வுகூட வசதிகள் இல்லையெனவும் இந்த சங்கம் கூறுகிறது.
இந்த நிலையில், ஆய்வுகூட வசதிகளை வழங்குவதுடன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வுகூடங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் இந்த பூச்சுகளை பரிசோதிக்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1