ஹரக் கட்டா வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி மீள அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

இந்த வழக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றம்சாட்டப்பட்ட ஹரக் கட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை ஜூன் 06ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்