கூலிப்படை சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்

Date:

ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்யாவிற்கு கூலிப்படையாக அழைத்துச் சென்ற மனித கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு பிரதான நீதவான் திரு.ரக்கித அபேசிங்க நேற்று (16) உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கல்கந்துரே ஆராச்சில ரணராஜா ரணவக்க (59)
ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் விஜேசிங்க முடியசெல சரத் ரம்யசிறி விஜேசிங்க (66),
விஜேபண்டார என்ற மேஜர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஏனைய இருவரும் திகன மற்றும் மாவனெல்ல பிரதேசங்களில் வசிக்கும் முகவர்கள்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ரஷ்யாவில் உயர் சலுகைகள் வழங்கப்படும் என வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு ரஷ்ய ராணுவத்திற்கு கூலிப்படையினராக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்தேகநபர்கள் பல்வேறு பொய்யான தகவல்களை வழங்கி, பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் இந்த சேவையின் மூலம் பெரும் சலுகைகளைப் பெறுவார்கள் என ஊக்குவித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாகச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவத்தினர், ரஷ்ய முகாம்களில் பணியில் சேர்ந்த பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் சேவையாற்றுவதற்காக படையினர் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு செல்ல விண்ணப்பித்ததாக மாவனெல்லையில் வசிக்கும் 5ஆவது சந்தேக நபரான ஜகத் முனசிங்கவிற்காக ஆஜரான சட்டத்தரணி தந்த நிரஞ்சன தெரிவித்தார். இந்த விளம்பரங்களில் ராணுவ வீரர்களாக சேருபவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நல்ல சம்பளத்துடன் ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. அதன்படி, இங்கு பலியாகியவர்கள் தாமாக முன்வந்து அங்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதே இப்போது மிக முக்கியமான விஷயம். எனவே சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ரக்கித அபேசிங்க உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்