ரவுடித்தனம் காட்டிய இராஜாங்க அமைச்சர்

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .

அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .

அப்போது, அவர் ​​பாதுகாப்பு அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது , ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்