Pagetamil
இலங்கை

இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிய சிகிச்சை விடுதிகள் திறப்பு!

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ, சத்திர சிகிச்சை விடுதிகள் இன்று காலை திறந்தது வைக்கப்பட்டன.

இன் நிகழ்வு சிறுவர்கள், குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் பா.சயந்தன் தலமையில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.

இவ் கட்டிட தொகுதியானது வைத்திய நிபுணர் பா.சயந்தன் மற்றும் அவரது பாரியார் கிருபாளினி அவர்களது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், சத்திரசிகிச்சை பேராசிரியர் வைத்திய நிபுணர் எஸ்.ரவிராஜ் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களான ஜெ.கஜேந்திரன், என்.சரவணபவ, வை.சிவாகரன், ஆர்.துவாரதீபன் ஆகியோரும், விஷேட அதிதியாக இலங்கை நிர்வாக சேவையின் உயரதிகாரி பொ.பிறேமினியும் கலந்து சிறப்பித்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பஸ்களில் தேவையற்ற உபகரணங்களை அகற்ற 03 மாத கால அவகாசம்

east tamil

பேருந்து ஓட்டுநர்களுக்கான வயது வரம்பு அறிவிப்பு

east tamil

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

Leave a Comment