இன்று (10) காலை கொழும்பு கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகளிர் விடுதிக்குள் இரகசியமாக நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த இளம் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பெரும் போராட்டத்தின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் விசேட கடமைகளுக்காக கரையோரப் பொலிஸாருக்கு நியமிக்கப்பட்ட மாங்குளம் விசேட அதிரடிப்படை முகாமின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண் கான்ஸ்டபிள் கூக்குரலிட்டதை தொடர்ந்து, சந்தேகநபர் தப்பியோட முற்பட்டார். அவரை ஏனைய பெண்கள் வழிமறித்து பெரும் போராட்டத்தின் பின் மடக்கிப் பிடித்தனர்.
சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1