26.3 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

ரணில் வழக்கமான பல்லவி!

முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும் அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (09) ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மீட்சித் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் இதற்கு நிகரான எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது, ​​நாட்டின் பணவீக்கம் 1.5% வரை வீழ்ச்சியடைந்துள்ளதோடு பல ஆண்டுகளாக பற்றாக்குறையில் இருந்த முதன்மைக் கணக்கின் இருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்ற முடிந்தது. பல தசாப்தங்களுக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளின் நடப்புக் கணக்கு உபரியாக உள்ளது. வட்டி விகிதம் 10% – 13% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஜனாதிபதி இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் சுட்டிக்காட்டினார்.

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 300 ரூபாவை விட குறைக்க முடிந்ததோடு, அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சவாலான, கடினமான ஆனால் சரியான பாதையில் பயணிப்பதால் இந்த நிலையை அடைய முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்தக் கடன் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 வீதமாகக் குறைத்து, அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவையை வருடாந்தம் 13 வீதமாகக் கொண்டு வருவதும், வெளிநாட்டுக் கடன் சேவையை வருடாந்தம் 4.5 வீத்தைவிட அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதும் கடன் மறுசீரமைப்பின் இறுதி இலக்கு என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் மோசடி

Pagetamil

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

Pagetamil

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜினாமா

east tamil

Leave a Comment