தாய்லந்தில் 59 வயது கேத்தரின் டெலாகோட்டே எனும் தொழிலதிபர், தமது இல்லப் பணிப்பெண்ணுக்கு 100 மில்லியன் பாட் (சுமார் 812,267,826 இலங்கை ரூபா) மதிப்புள்ள சொத்துகளை விட்டுச் சென்றுள்ளார்.
அதில் 5 நீச்சல் குளங்கள் கொண்ட வில்லா பாணி ஹொட்டலும் அடங்கும்.
17 ஆண்டுகளாகத் தம்மிடம் பணிப்பெண்ணாக வேலை செய்துவரும் நுட்வாலாய் பூபொங்த்தாவுக்குக் கேத்தரின் அந்தச் சொத்துகளை எழுதிவைத்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சை சேர்ந்த கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற கேத்தரின், தாய்லாந்து வந்து அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாக நுட்வாலாய் கூறினார்.
நோய்வாய்ப்பட்ட 59 வயதான பிரெஞ்சுப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி சொகுசு வில்லா வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே இறந்து கிடந்தார். உடலில் குண்டு துளைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டது.
இறப்பதற்குமுன்னர், கேத்தரின் தமது இறுதிச் சடங்குக்காக நுட்வாலாயின் வங்கிக் கணக்கில் 500,000 பாட் வைப்பிலிட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
தமது முதலாளி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று அந்தப் பணிப்பெண் நம்புகிறார்.
புற்றுநோயால் அவதியுறுவதாக ஏற்கெனவே தம்மிடம் தெரியப்படுத்திய கேத்தரின் தற்கொலை எண்ணம் எதனையும் வெளிப்படுத்தியதில்லை என்றார் நுட்வாலாய்.