Pagetamil
சினிமா

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். இதையடுத்து, ஒரு கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

அண்மையில் சமூக வலைதளங்களில் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று லீக் ஆனது. அதில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இடம்பெற்றனர். இதன் மூலம் சிம்பு நடிப்பது உறுதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும், வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் சிலம்பரசன் கமல்சானுக்கு மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment