ரி20 உலகக்கோப்பை: ஸ்மித்தை கழற்றிவிட்டது அவுஸ்திரேலியா!

Date:

ஐசிசி ரி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஜூன் 2ஆம் திகதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இதில் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக முன்னாள் கப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடம் வழங்கப்படவில்லை. கப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடக்க வீரர்களாக டேவிட் வோர்னர், டிராவிஸ் ஹெட் இடம்பெற்றுள்ளனர். 34 வயதான ஸ்மித் இதுவரை சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 67 ஆட்டங்களில் விளையாடி 24.86 சராசரியுடன் 1,094 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதேவேளையில் ஐபிஎல் தொடரில் டெல்லி கபிடல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வரும் 22 வயதான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்கிற்கும் உலகக் கோப்பை அணியில் இடம் வழங்கப்படவில்லை.

அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கப்டன்), டேவிட் வோர்னர், டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், கிளென் மக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொயினிஸ், கமரூன் கிரீன், மத்யூ வேட், ஜோஷ் இங்கிலிஷ், அஷ்டன் அகர், ஆடம் ஸம்பா, பாட் கம்மின்ஸ், நதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவிற்கு கப்பலில் புறப்பட்ட இலங்கைத்தமிழர் அனாதையாய் ஆபிரிக்காவில் உயிரிழந்த சோகக்கதை!

பாதுகாப்பைத் தேடி இந்தியாவிலிருந்து கனடாவுக்குப் புறப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரின் நீண்ட...

ரௌடி கோபுவிடமிருந்து எம்மை காப்பாற்றுங்கள்: மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

வவுணதீவு வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழுவின் தாக்குதலை கண்டித்தும் வாள்வெட்டு...

தவறான உறவு சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு பொலிசில் சரணடைந்த கணவன்!

மனைவி தனது உறவினரான இளைஞர் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்