25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
சினிமா

கவின் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் நெல்சன்!

இயக்குநர் நெல்சன் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர், “சுவாரஸ்யமான கன்டென்ட் கொண்ட படங்களை தயாரிப்பதே நோக்கம்” என தெரிவித்திருந்தார். அதன்படி அவர் கவின் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ ஆகிய படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் நெல்சன் திலீப்குமார். அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது ‘தயாரிப்பாளர்’ அவதாரத்தை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “என்னுடைய 20 வயதிலிருந்து பொழுதுபோக்கு துறையில் பயணித்து வருகிறேன். இந்த துறையில் ஏற்ற இறக்கங்களை பார்த்துவிட்டேன். என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ‘ஃபிளெமென்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சுவாரஸ்யமான உள்ளடக்கம் கொண்ட படங்களை தயாரிப்பதே நோக்கம். முதல் படத்தின் அறிவிப்பை மே 3-ம் தேதி வெளியிடுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

அதன்படி அவர் கவின் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் தயாரிக்க உள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நெல்சனின் உதவியாளர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment