கல்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட கந்த குடாவ கிராமத்தில் உள்ள வீட்டின் கிணற்றில் இரண்டரை மாத பெண் குழந்தையின் சடலம் மிதப்பதை கல்பிட்டி பொலிஸார் கண்டுபிடித்ததுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) அதிகாலை 5.10 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 119 க்கு அயலவர் வழங்கிய செய்திக்கு அமைய பொலிஸார் கிணற்றில் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற போது குழந்தையின் தாய், எட்டு வயது சிறுமி மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இன்று அதிகாலை வீட்டில் இருந்துள்ளனர். அப்போது தந்தை வேலைக்காக வேறு பகுதிக்கு சென்றுள்ளார்.
இது சந்தேக நபரின் இரண்டாவது திருமணம் மற்றும் அவரது கணவரின் நான்காவது திருமணம் ஆகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1