இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மே தின கூட்டமானது “விழிப்படைவார் தொழிலாளர் விடியும் தேசம்” எனும் தொனிப் பொருளில் பெரியகல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
பெரியகல்லாறு வட்டார கிளையினரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் மே தின கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியானது நடைபவனியாக பெரியகல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய முன்றலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து மே தினக் கூட்டமானது ஆரம்பமாகியது.
பல தொழில் சங்கங்களில் பிரகடன உரை பாராளுமன்ற உறுப்பினர்களின் உரை,கலை நிகழ்வுகள் என்பன நடை பெற்றது.
குறித்த மேதின கூட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த இன்னாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் என பெருந் திரளானோர் கலந்து கொண்டார்கள்.
-பழுகாமம் நிருபர்-