27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
உலகம்

கடந்த ஆண்டு காணாமல் போன தாய்லாந்து மொடல் அழகி சடலமாக மீட்பு!

பஹ்ரைனில் கடந்த ஆண்டு காணாமல் போன தாய்லாந்து மொடல் அழகி கைகனின் உடல், சல்மானியா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைகன் கென்னகம் (வயது 31). மொடல் அழகியான இவர், சில காலமாக வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் வந்து ஒரு ஹொட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

தனது பஹ்ரைன் வாழக்கை, வேலை பற்றி தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்த அவர், பஹ்ரைனில் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாகவும் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார். சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை நிறுத்தினார். அதன்பின்னர் அவரை அவரது குடும்பத்தினரால் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மிகுந்த கவலை அடைந்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர்.

பஹ்ரைனில் உள்ள தாய்லாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினரும் தூதரகத்தை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், காணாமல் போன கைகன் கென்னகம், ஓராண்டுக்கு பிறகு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சல்மானியா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 18ஆம் திகதி தாய்லாந்து தூதரகத்தின் கவனத்திற்கு வந்தது. அவரது காலில் டாட்டூ குத்தப்பட்டிருந்தது. இதையடுத்து தூதரக அதிகாரிகள், கைகனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். அவர்கள் சொன்ன டாட்டூ அடையாளத்தை வைத்து, இறந்திருப்பது தங்கள் மகள்தான் என்பதை பெற்றோர் உறுதி செய்தனர்.

அதிக அளவில் மது அருந்தி அதனால் ஏற்பட்ட விஷம் காரணமாக இதயம் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கைகனின் குடும்பத்தினர் இதை மறுத்துள்ளனர். கைகனின் உடலில் வெட்டு, சிராய்ப்பு காயங்கள் உள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கைகன் மரண வழக்கை மீள விசாரிக்க வேண்டுமென விரும்புகிறார்கள்.

கைகனின் குடும்பத்தினர் அவரது உடலை தாய்லாந்துக்கு கொண்டு வந்து மீள பிரேத பரிசோதனை செய்ய விருப்பப்பட்டுள்ளனர். எனினும், இதற்கு பெருந்தொகை பணம் தேவையென்பதால் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

Leave a Comment