அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக அவரின் ‘போர் தொழில்’ படம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை திருமலை தயாரித்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் ஆர்யா தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ‘எமக்குத் தொழில் கவிதை’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளின் தலைப்பை சற்று மாற்றி டைட்டிலாக்கியிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் . ஒரு பிளே பாய் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Very happy to launch the teaser of #EmakkuThozhilRomance
⭐ing @AshokSelvan @Avantika_mish
Directed by #BalajiKesavan@nivaskprasanna @ThirumalaiTv #MsBhaskar #Urvashi #TCreations @teamaimpr @thinkmusicindia
— vijayantony (@vijayantony) April 23, 2024