உலகம்

ஈரானுக்குள் எவ்வாறான தாக்குதல் நடந்தது?

ஈரானின் இஸ்பஹானில் சந்தேகத்திற்குரிய பொருளை வான் பாதுகாப்பு அமைப்புக்கள் தாக்கியதாக அந்த பிராந்திய இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் சியாவாஷ் மிஹாண்டவுஸ்ட் தெரிவித்ததாக அரசு தொலைக்காட்சி மேற்கோளிட்டுள்ளது.

மூத்த தளபதியின் கூற்றுப்படி, எந்த சேதமும் ஏற்பவில்லை.

ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் “தகவலறிந்த ஆதாரங்களை” மேற்கோள் காட்டி  “வெளிநாட்டில் இருந்து இஸ்பஹான் அல்லது ஈரானின் வேறு எந்தப் பகுதிக்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை” என்றது.

ஈரானில் ஒரு இராணுவ விமானத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஈரானிய ஆய்வாளர் நாட்டிற்குள் “உள்ளிருந்து ஊடுருவியவர்களால்” மினி-ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதாக அரசு தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்.

ஏபிசி நியூஸ் முன்பு ஒரு அநாமதேய மூத்த அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி, ஈரானில் உள்ள இலக்கு மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.

ஈரானிய அரசுக்கு சொந்தமான செய்தி நெட்வொர்க் பிரஸ் டிவி, இஸ்பஹான் நகருக்கு அருகில் உள்ள அணுசக்தி தளத்தில் “வெடிப்பு அல்லது சேதத்திற்கான அறிகுறி எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையம் இஸ்ஃபஹானுக்கு வடக்கே நடான்ஸில் அமைந்துள்ளது. நடான்ஸ் தளம் முன்பு நாசவேலை தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டது. 2021 இல் அங்கு “கட்டுப்படுத்தப்பட்ட” வெடிப்பும் பதிவாகியுள்ளது. இதற்கு இஸ்ரேலே காரணமென குறிப்பிடப்பட்டது.

இதேவேளை, ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு எந்த சேதமும் இல்லை என்றும்,
ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் கூறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கனடாவில் இறுதிச்சடங்கு செலவு எகிறல்: உரிமைகோரப்படாத சடலங்கள் அதிகரிக்கிறது!

Pagetamil

தைவான் பாராளுமன்றத்துக்குள் களேபரம்!

Pagetamil

‘1000 இற்கும் அதிக ஹமாஸ் போராளிகள் எங்கள் நாட்டில் சிகிச்சை பெறுகிறார்கள்’: துருக்கி ஜனாதிபதி

Pagetamil

லைசன்ஸ் கேட்ட பொலிஸ்காரருக்கு சட்டையை இறக்கி காண்பித்த இளம்பெண்!

Pagetamil

‘உக்ரைனுக்காக போரிட மேற்குலகம் விரும்பினால் நாங்களும் ரெடி’: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

Pagetamil

Leave a Comment