யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும் காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.
பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35 வயதான குணதிலகம் பிரணவன் எனும் இளைஞன் அதே பகுதியினை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் வீட்டாரிடயை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டு வளவினுள் புகுந்து மலசலகூடத்தினுள் ஒழித்திருந்த இளைஞன் 4 மணியளவில் வீட்டில் உறங்கிய நிலையில் இருந்த காதலியையும் காதலியின் தாயாரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த நிலையில் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து இளைஞனும் பனிப்புலம் பகுதியில் உள்ள வளவொன்றினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளை இளவாலை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.