கம்பளை, ராஜஅலகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு விழாவில் கிரீஸ் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று (15ம் திகதி) ராஜஅலகம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பல மணி நேர முயற்சியின் பின்னர் ஒருவர் மீது ஒருவர் ஏறி கிரீஸ் மரத்தில் இருந்து கொடியை எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மரம் விழுந்த போது ஐந்து வீரர்களும் மரத்தில் ஏறிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைப்பாளர்கள் தலைகீழாக நட்டதால் பலம் இழந்து மரம் விழுந்ததாக அத்தகல பொலிஸார் தெரிவித்தனர்.
கிரீஸ் மர பரிசுத் தொகையாக 15,000 ரூபாயும், புத்தாண்டு விழாவைக் காண வந்தவர்கள் வசூலித்த தொகையுடன் காயமடைந்த போட்டியாளர்களுக்கு 37,000 ரூபாயும் வழங்கப்படவிருந்தது.