நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட இலங்கையர் ஒருவர் தனது கடவுச்சீட்டின் பயோ டேட்டா பக்கத்தில் உள்ள தகவல்களை மாற்றியமைத்து, போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியாவிற்கு தப்பிச் செல்வதற்காக விமானத்தில் அமர்ந்திருந்த போது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பையில் வசிக்கும் 34 வயதுடையவரே கைது செய்யப்பட்டார்.
இன்று (10) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப் புறப்படவிருந்த ஏர்ஏசியா ஏகே-046 விமானத்தில் அவர் ஏறியுள்ளார்.
அவர் விமான நிலையத்தில் பயணிகளுக்கான அனைத்து அனுமதியையும் முடித்துவிட்டாலும், அவர் மீதான சந்தேகம் காரணமாக, அவரது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பெற்ற குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், அவர் மீது விமானப் பயணத் தடை இருப்பது தெரியவந்துள்ளது.