யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலையில் சில பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறையற்ற அல்லது சட்ட விரோதமாக பாடசாலையால் நிதி சேகரிக்கப்படுவதாக தகவல் வெளியானதையடுத்து, பழிவாங்கும் நோக்கத்துடன் சிலரால் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டதாக தெரிய வருகிறது.
பாடசாலை நிர்வாகத்தால் நிதி கேட்கப்படுவதாக, பெற்றோர் ஒருவர் விசனத்துடன் வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில், நிதி சேகரிப்பு விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இதனால், கோபமடைந்த நிதி சேகரித்ததாக குற்றம்சுமத்தப்பட்ட தரப்பினர், இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாகியொருவர், முன்னதாக பாசாலை நிதி தொடர்பில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனால், அவர் முறையற்ற விதமாக பழைய மாணவர் சங்க நிர்வாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்திருந்தது.
அப்படி வெளியேற்றப்பட்டவரே, இந்த தகவலை ஊடகங்களுக்கு கசிய விட்டிருக்கலாமன சந்தேகமடைந்துள்ள தரப்பினர், அவர் மீதும், வடஇந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அவரது மனைவி மீதும் நடவடிக்கையெடுக்க கோரி, சிலரை வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.