தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்த்தி கணேஷ். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 2014-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடிகை ஆர்த்தி நேற்று அக்கட்சியில் இணைந்தார். நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ், ஏற்கெனவே பாஜகவில் உறுப்பினராக உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1