இளைஞர்கள் சுதந்திரமாக அரசியல் செய்வதற்கான சூழலை உருவாக்குவது அவசர தேவை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது பெரியவர்களின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த ரணவக்க, ஐக்கிய குடியரசு முன்னணியின் கீழ் இளைஞர்களின் சுதந்திரம் மற்றும் படைப்பாற்றலுக்கு இடம் அளிக்கப்படும் என்றார்.
தற்போதைய பாராளுமன்றத்தில் 40 வயதுக்குட்பட்ட 26 உறுப்பினர்கள் உள்ளதாகவும், ஆனால் 60 வயதுக்கும் 90 வயதுக்கும் இடைப்பட்ட 57 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பத்தரமுல்லை எமது கிராம வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1