‘கார்த்திகைப்பூ விசாரணை மேலிடத்து ஓடர்’: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிசார் விளக்கம்!

Date:

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகை பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில் , மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தமை தொடர்பில் ஆசிரியர் சங்கத்தினால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழு , பொலிசாரின் வாக்கு மூலத்தினை பெறுவதற்காக , தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடந்த வெள்ளிக்கிழமை , மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் முன்னிலையான பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் , பொறுப்பதிகாரி விடுமுறையில் உள்ளதாக கூறி சம்பவம் தொடர்பிலான வாக்கு மூலம் வழங்கினார். அதன் போது தமக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரமே மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார்.

வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர், அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்