தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக தெரிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

Date:

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மகளீர் பேரவை செயலாளரும் மத்திய குழு உறுப்பினருமான சூரிய பிரதீபா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலையே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் என்ற போர்வையில் புதிது புதிதாக சிலர் தற்போது கட்சிக்குள் புகுந்துள்ளனர். அவ்வாறு புகுந்திருப்பவர்கள் இந்தக் கட்சியை அபகரித்து செல்லவே முயற்சி எடுக்கின்றனர்.

ஆனால் கட்சியை அபகரித்துச் செல்ல முயற்சிப்பவர்களுக்கு எப்பொழுதும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இடமளிக்கப்படாது என்பதுடன் அவர்களின் வியாபார எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறான நிலைமையில் தான் கடந்த வாரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டமும் வவுனியாவில் மிக இரகசியமாக நடாத்தப்பட்டிருக்கிறது. ஆனால் மத்திய குழு உறுப்பினர்கள் பலருக்கு அறிவிக்காமல் கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தையும் புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிராகவும் தடைகோரி வவுனியா நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கிறோம்.

இந் நிலையில் எமது கட்சியின் செயலாளர் நாயகத்தின் தற்போதைய நிலைமை என்பது ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஏனென்றால் அவருடைய முதுமை காரணமாக அவரால் தனியா செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையில் அவருக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தி கட்சியை சூறையாட அரசியல் வியாபாரிகள் முயற்சிக்கின்றனர்.

உண்மையில் கட்ணி தலைமைக்கு கட்சியை கொண்டு நடாத்த முடியவில்லையாயின் அதற்கு கட்சியில் இருக்கிற சரியான நபர்களை தெரிவு செய்து அனைவரது சம்மத்த்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து கட்சியை கைப்பற்றும் வியாபார நோக்கில் திடிரென கட்சிக்குள் உட்புகுந்துள்ளவர்களிம் எமது கட்சியை இப்போதைய கட்சித் தலைமை ஒப்படைக்க முயல்வது ஏற்கமுடியாது.

எனவே அவருடைய முதுமை காரணமாக நாங்கள் சற்று விலகி நின்றாலுமே கூட அவருடைய செயல்பாட்டிற்கு தடங்கல் ஏற்படுத்தி இந்த கட்சியை அபகரித்து செல்ல நினைப்பவர்களுடைய செயற்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறான காரியங்களில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபட அவர்களை அனுமதிக்க முடியாது என்பதன் காரணமாகவே இந்த வழக்கை நாங்கள் இந்த வழக்கை பதிவு செய்தோம்.

யார் வரவேண்டும் வந்து எவ்வளவு காலம் என்ன எவ்வாறு பணியாற்ற வேண்டும்? யார் யார் மத்திய குழுவில் அங்கத்தவர்களாக பயணிக்க முடியும் என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றது. கட்சியின் யாப்பில் அவை மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனவே கட்சியினுடைய யாப்பு விதிகளுக்கு அமைவாக எதிர்வரும் காலங்களில் வரும் புதிய நபர்களுக்கான பதவிகள் அவர்களுக்கான பொறுப்புகள் நிச்சயமாக வழங்கப்படும் யாரும் அவசரமாக வந்து கட்சியினை அபகரித்துச் செல்ல முடியாது என்பதனை இங்கு தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம்

தமிழ விடுதலைக் கூட்டணியின் மகளிர் பேரவையின் செயலாளராகவும் மத்திய குழு உறுப்பினராகவும் விடுதலை கூட்டணியின் செயற்பாட்டின் சமீப காலத்தில் ஏற்பட்ட சில இடையூறுகள் காரணமாக கட்சியின் கூட்டங்களில் சில மாற்றங்கள் சில ரகசிய கூட்டங்கள் நடைபெற்று வருவது பலரும் ஊடகங்களும் அறிந்து ஒரு விடயம்.

இதன் அடிப்படையில் கடந்த (16/03/2024) அன்று வவுனியா இரட்டை பெரியகுளம் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது கட்சியின் செயற்பாடுகளுக்கு முரணானதும் கட்சி யாப்புகளின் அறிவுறுத்தலுக்கு முரணானதும் தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தவர்களுக்கு எதிராகவும் கூட்டப்பட்ட ஒரு கூட்டமாகும்.

இந்த கூட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் தெளிவில்லாத கூட்டமாக காணப்பட்டது. எனவே இந்த கூட்டத்திற்கு எதிராக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் எம்மால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது எமது தரப்பு சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிர்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் இந்த வழக்குக்கு எதிராளிகளாக நாங்கள் கொடுத்திருந்த கட்சியின் செயலாளர் நாயகம் வி ஆனந்த சங்கரி உட்பட சில அங்கத்தவர்களுக்கும் அங்கு அந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அங்கத்தவர்கள் அல்லாதவர்களுக்கும் இடைக்கால தடை உத்தரவினை வழங்குவதற்கான அழைப்பானையை விடுத்துள்ளது

தமிழர் விடுதலைக் கூட்டணியானது ஒரு பாரம்பரிய கட்சி. இக்கட்சியில் கடந்த சில காலமாக மிகப்பெரிய இடையூறுகள் இடைஞ்சல்கள் கட்சியின் கூட்டங்களில் பெரும் குழப்பங்கள் கட்சியில் பெருங்குழப்பங்கள் நடைபெற்று வந்தது அனைவரும் அறிந்த ஒரு விடயமே.

ஒவ்வொரு ஆண்டு காலமும் அல்லது ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை மத்திய குழுக்கள் பொதுக்குழுக்கள் ஏற்படுத்தப்படுவதும் அந்த ஏற்படுத்தப்பட்ட குழுக்களின் அல்லது அந்த மத்திய குழுவின் உடைய செயல்பாடுகள் மிக சாத்தியமற்ற முறையில் அல்லது அதனை ஒழுங்கு முறையாக நடைபெற முடியாத அளவுக்கு சில தடைகள் இடையூறுகள் ஏற்பட்டு வந்தது பலரும் அறிந்திருந்தனர்.

தமிழர் விடுதலை கூட்டணியினை அபகரித்துச் செல்ல அல்லது எடுத்துச் செல்ல பல அரசியல் வியாபாரிகள் முன்வந்திருப்பது இன்று பலரும் அறிந்து ஒரு விடயம் தான். தமிழர் விடுதலை கூட்டணி என்பது ஒரு சாதாரண கட்சி அல்ல ஒரு பாரம்பரிய முக்கிய கட்சி. தந்தை செல்வா உட்பட பெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட பராமரிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு தொன்மையான கட்சி.

இந்த கட்சியினை அவ்வளவு வெகு விரைவில் யாரும் எடுத்துச் செல்வதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்கள் யாரும் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டார்கள். இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த இடை வெளிகளை அல்லது அங்கு ஏற்பட்ட உட் பூசல்களை சாதகமாக பாவித்துக் கொண்டு சில அரசியல் வியாபாரிகள் கட்சியினுள் புகுந்து கட்சியினை அபகரிக்க முயற்சி எடுப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.

எனவே எவ்வளவுதான் இவர்கள் முயன்றாலும் கட்சியில் தற்போது இருக்கின்ற இந்த அங்கீகரிக்கப்பட்ட மத்திய குழு ஒருபோதும் இவ்வாறான வியாபாரிகளுக்கு அங்கு இடம் அளிக்கப் போவதில்லை. அதேவேளை கட்சியின் செயல்பாடுகளின் காரணமாக அதிர்ச்சியான மனநிலைகளில் வெளிநாடுகளில் அல்லது வெளியிடங்களில் இலங்கையில கூட இருந்துகொண்டு கட்சி அலுவலகத்திற்கு கூட வர முடியாத நிலையில் இருக்கின்ற கட்சியின் உறுப்பினர்கள் இதனை எந்த ஒரு சூழ்நிலையும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம் அளிக்க மாட்டார்கள். இந்த அரசியல் வியாபாரிகள் நினைப்பது நிச்சயமாக நடைபெறாது என்பதையும் கூறிக் கொள்ள விரும்கின்றோம்.

நீங்கள் நினைக்கின்ற போது நினைக்கின்ற அளவிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்றும் சோர்ந்து போய்விடவில்லை. அதனுடைய ஒவ்வொரு அங்கத்தவர்களும் ஒவ்வொரு ஆயுள் கால உறுப்பினர்களும் ஒவ்வொரு உறுப்பினர்களும் இந்த கட்சியின் பாதுகாப்பில் என்றைக்குமே தங்களுடைய பங்களிப்பினை வழங்குவதற்கு எப்பொழுதுமே ஆவலாக இருக்கின்றார்கள்

நாங்கள் சமீபத்தில் அறிந்த ஒரு விடயம் தமிழர் விடுதலை கூட்டணியினுடைய சொத்துக்கள் மற்றும் இருப்புகளை பலர் விலை பேசி வருவதாகவும் சில சில சொத்துக்கள் விலை போய் இருப்பதாகவும் அறிய கிடைத்திருக்கின்றது.

கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் நீங்கள் யாரும் கட்சியினுடைய எந்த சொத்துகளுக்கும் நீங்கள் அதனை வாங்கவும் அல்லது அதற்கான உடன்படிக்கைகளுக்கோ முன் வரவேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம்.

கட்சியின் பாதுகாப்பில் ஒப்படைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர்கள் மத்திய குழு உறுப்பினர்கள் இன்று பொதுச்சபையில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் இதற்காக முழுமையான தங்களுடைய பங்களிப்பினை எந்த வேளையிலும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

எனவே நேற்று இன்று வந்து கட்சியில் புகுந்து கட்சியினுடைய தொன்மையும் அதனுடைய பாதுகாப்பையும் அதனுடைய பாரம்பரியத்தையும் கெடுக்கும் செயற்பாட்டில் யாரும் இணைய வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் இந்த செய்தியாளர் சந்திப்பின் ஊடாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்

இந்த ஊடக சந்திப்பின் நோக்கமும் இந்த வழக்கு தாக்கல் செய்வதன் நோக்கமும் இந்த ஊடக சந்திப்பின் நோக்கமும் தமிழர் விடுதலைக் கூட்டணியினை தனி நபர் எவரும் எடுத்துச் செல்ல முடியாது என்றும் சமீபத்தில் கட்சியின் ஆர்வலர்கள் எமது கட்சியினுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் என்ற ஒரு போர்வையில் கட்சிக்குள் புகுந்து அதனை அபகரித்து செல்ல முயற்சிப்பவர்களுக்கு எப்பொழுதும் தமிழர் விடுதலைக் கூட்டணி இடம் அளிக்க மாட்டாது என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

-எஸ்.நிதர்ஷன்-

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்