விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாயச் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்களையும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் உபகரணங்களையம் ஆளுநர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சாதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரத்தினம், கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1