27.4 C
Jaffna
January 27, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

சுமந்திரன் ஆட்சேபணை தாக்கல்… கொழும்பிலிருந்து வந்த இடைபுகு மனுதாரர்: இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு நீண்ட இழுபறியில்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபணைகளுக்காக எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று வழக்கு விசாரணையின் போது, எம்.ஏ.சுமந்திரன் ஆட்சேபணை சமர்ப்பித்ததால், வழக்கு உடனடியாக முடிவடைவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளது.

அத்துடன், எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர் என குறிப்பிடப்படும் சி. இரட்ணவடிவேல், இடைபுகு மனுதாரராக விண்ணப்பம் செய்தார்.

“இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் உள்ள சிலருக்கு இந்த வழக்கு முடிவடையாமல் இழுபட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கமுள்ளது.  சில குறைபாடுகள் இருந்தாலும், வழக்கை உடனடியாக முடித்து, கட்சியையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தினால், வழக்கின் மீது நாம் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. ஆனால் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அந்த நோக்கத்துக்கு எதிரானவர்கள். அதனால்தான் இன்று ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இடைபுகு மனுதாரர் ஒருவர் உள்நுழைக்கப்படுகிறார்“ என தமிழ் அரசு கட்சி தலைவர் உள்ளிட்ட 6 பேரை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவு, தலைவர் தெரிவுக்கு எதிராக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் வழக்கு தொடர்ந்தது, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அணிப் போட்டியின் எதிரொலியென்ற கருத்தும் உள்ளது.

இந்த வழக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்காக, வழக்கின் பிரதிவாதிகளாக மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், ச.குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய 6 பிரதிவாதிகளும், யாப்பு மீறப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு, மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்குவதாக ஒத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், எஞ்சிய ஒரே பிரதிவாதியான எம்.ஏ.சுமந்திரனும், இந்த வழக்கில் தனக்கு ஆட்சேபணையில்லையென தெரிவித்திருந்தால், வழக்கு இன்றுடன் முடிவுக்கு வரும் சூழல் இருந்தது.

எனினும், இந்த வழக்கில் தனக்கு ஆட்சேபணையிருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் ஆட்சேபணை தாக்கல் செய்தார். 20 பேரை இணைத்தது மட்டுமே சட்டரீதியற்ற நடவடிக்கை, யாப்பின்படியே தேர்தல் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் அணியை சேர்ந்த இரட்ணவடிவேல் இடைபுகு மனுதாரராக வழக்கில் நுழைந்தார். அதற்கு சி.சிறிதரன், ச.குகதாசன் ஆகியோருக்காக முன்னிலையான சட்டத்தரணி கே.வி.தவராசா கடுமையான ஆட்சேபணை தெரிவித்தார்.

“இந்த வழக்கு கடந்த தவணை விசாரணைக்கு வந்த போது, வழக்கை உடனடியாக முடிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, எதிராளியான 6 பேரும், வழக்காளியின் நிவாரணங்களை வழங்க ஏற்றுக்கொண்டோம்.

ஆனால், இந்த வழக்கை நாங்கள் வெல்ல முடியும். இந்த வழக்கை நடத்தி நாங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தமைக்கு சமமானது. ஏனெனில், காலம் சென்று கட்சி அழிந்து, மக்களின் அரசியல் அபிலாசைகள் அழிந்தால் வழக்கில் வென்று என்ன பலன்? ஒரு கட்சியும். ஒரு சமூகமும் பாதிக்கப்பட போகிறது. இடைபுகு மனுதாரரக வருவதை ஆட்சேபிக்கிறோம். அப்படி வருவதென்றால் அவர் கடந்த தவணைக்கே வந்திருக்க வேண்டும். இடைபுகு மனுதாரரின் நோக்கம் இந்த வழக்கை தொடர்ந்தும் இழுத்து செல்வதே. வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற கட்சி அங்கத்தவர்கள் சிலரின் நோக்கத்தினாலேயே இந்த இடைபுகு மனுதாரர் வந்துள்ளார்“ என்றார்.

இதையடுத்து, இடைபுகு மனுதாரரை இணைப்பதற்க எதிராகவும், மூல வழக்கிற்கு எதிராகவும் ஏனைய 6 பேரும் ஆட்சேபணை தெரிவிப்பதற்காக எதிர்வரும் 24ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
3

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment