27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

கொழும்பில் ரூ.700… யாழில் ரூ.3500: யாழில் சிக்கிய போதைக்கும்பல் வெளிப்படுத்திய தகவல்!

யாழ்ப்பாண நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்கள், இளவயதினருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 6 பேர் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியகியுள்ளன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை ஏற்றி வரும் குறிப்பிட்ட சில அதி சொகுசு பேருந்துகளில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையாக இந்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் தகவலின் அடிப்படையில், குருநகரில் மேலும் 2 பேர் கைதாகினர். மேலதிக தகவலின் அடிப்படையில்- நாவாந்துறையை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டியில் திரிந்து வியாபாரம் செய்வது தெரிய வந்தது. அவரே இந்த குழுவின் பிரதான சூத்திரதாரி. அவரை கைது செய்ய முற்பட்ட போது, முச்சக்கர வண்டியை கைவிட்டு ஓடித்தப்ப முயன்றார். அவர் விரட்டிப் பிடிக்கப்பட்டார்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாவாந்துறையை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரே கொழும்பிலிருந்து இந்த போதை மாத்திரைகளை தருவித்து, விற்பனைக்கு விநியோகிப்பதாக குறிப்பிட்டனர்.

10 மாத்திரைகளை கொண்ட ஒரு அட்டையை 700 ரூபாவிற்கு கொழும்பில் கொள்வனவு செய்து, நாவாந்துறை நபருக்கு 2000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், இந்த நபர் அதை 2700 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல், அதை யாழ் நகரை அண்டிய பகுதிகளில் 3500 ரூபாவிற்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

கொழும்பிலிருந்து வரும் சில சொகுசு பேருந்துகளில் உதவியாளர்களாக பணியாற்றும் இளைஞர்கள், இந்த மாத்திரைகளை கொழும்பிலிருந்து கொண்டு வர உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைதான 6 இளைஞர்களும் 18 – 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

அண்மையில் திருத்தப்பட்ட சட்டமூலத்தின்படி, ஆபத்தான போதை மாத்திரைகளையும் அபாயகரமான போதைப்பொருட்களில் இணைக்கப்பட்டுள்ளதால், போதை மாத்திரை விற்பவர்களும் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

east tamil

இந்திய உயர் ஸ்தானிர் – மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

east tamil

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா முரண்பாடு

east tamil

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

east tamil

பல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

east tamil

Leave a Comment