நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.



