பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு எதிரான மனுக்கள் முடிவுக்கு வந்தன!

Date:

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக  கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த 07 மனுக்களை பரிசீலிப்பதை முடிவுக்கு கொண்டுவர உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று (02) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டன.

அப்போது சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தேசபந்து தென்னகோனை நிரந்தர பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தமது தரப்பினர் ஏற்கனவே மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பதில் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தொடர வேண்டிய அவசியமில்லையென சுட்டிக்காட்டினர்.

இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்