சட்டோகிராமில் நடக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கையின் இந்த ஓட்ட எண்ணிக்கையும் ஒரு சாதனையாக பதிவாகியுள்ளது. அதாவது, அணியின் எந்த வீரரும் சதமடிக்கமல் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
இலங்கையின் முதல் ஏழு துடுப்பாட்டக்காரர்களில் ஆறு பேர் அரை சதம் விளாசினார்கள். இலங்கை இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோராக குசல் மெண்டிஸ் 93 ரன்களும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 92 ரன்களும் பெற்றனர். காமிந்து நேற்று சமடித்திருந்தால், தொடர்ச்சியாக மூன்றாவது டெஸ்ட் சதமடித்தவராகியிருப்பார்.
1976ல் கான்பூரில் நியூசிலாந்திற்கு எதிராகஇந்தியா 524/9 என டிக்ளேர் செய்ததே, அணியின் எந்த வீரரும் சதமடிக்காமல் அணியொன்று பெற்ற அதிக ஓட்டமாக இதுவரை இருந்தது. அதை இலங்கை நேற்று முறியடித்தது. இந்தியாவின் சாதனை பதிவான போது, 6 இந்திய வீரர்கள் அரைசதம் அடித்திருந்தனர்.