குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்த மனைவி, தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரான 80 வயது முதியவரை அழைத்து வந்த நிலையில், தங்கும் இடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
இதில், குவைத் நாட்டவர், மற்றொரு 76 வயது முதியவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீ வைத்தவர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிபில பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்துள்ளது, ஆனால் வீடு மற்றும் அதன் உடமைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.