Pagetamil
சினிமா

சிங்கப்பூரில் வேட்டி கட்டி நடித்த தமிழ் நடிகர் நான்தான்: ராமராஜன்

ராமராஜன், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள படம், ‘சாமானியன்’. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார்.நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், மைம் கோபி உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, இசை அமைத்துள்ளார். ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் ராமராஜன் பேசியதாவது: இந்த 23 வருடங்களிலும் ராமராஜனை நினைவு வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இளையராஜாவும் ஒரு காரணம். அவரது பாடல்கள்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ‘கரகாட்டக்காரன்’ 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு, 100 நாள் படங்களையும் கொடுத்தேன். இதில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார். இதில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை என்றேன்.

இளையராஜா, எனக்கு கொடுத்தது போல் வேறு ஹீரோவுக்கு பாடல்களை கொடுக்கவில்லையே என்று சொல்வார்கள். நான் கூட ரஜினி சாருக்கு கொடுத்தது போல எனக்கு பாடல்களை ராஜா சார் கொடுக்கவில்லை என்று சொல்வேன்.

ஆனால் ‘சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா’ என்ற அந்த ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகர் நான்தான். எங்களுடன் மாட்டு வண்டியையும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாக இருந்தோம். விமானத்தில் அனுமதிக்கவில்லை.

இவ்வாறு ராமராஜன் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment