பல்வலி பொறுக்க முடியாமல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை, மொரவக்க, பரகல பிரதேசத்தில் வசித்து வந்த ஹன்சிகா நவரத்ன என்ற 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக படிப்பை முடித்து ஆசிரியையாக வர வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த இந்த யுவதி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பற்களில் ஏற்பட்ட வலி காரணமாக தெனியாய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (29) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1