24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

தங்கச்சங்கிலி அறுத்தவர்கள் மடக்கிப் பிடிப்பு!

முகமாலையில் தங்கச்சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பியோடிய திருடர்கள், அந்த பகுதி இளைஞர்களின் துணிகர நடவடிக்கையால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

முகமாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு சென்ற பெண்ணின் தங்க ஆபரணம் திருடர்களால் அபகரிக்கப்பட்டது.

நேற்று இரவு 10.00 மணியளவில் முகமாலையில் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்ற பெண்ணின் தாலியினை அறுத்துக்கொண்டு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிழில் தப்பி ஓடியுள்ளார்கள்.

இதனை அவதானித்த முகமாலை பகுதி இளைஞர்கள் பொலிசார்.மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதுடன், திருடர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

பளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் துரிதமாக செயற்பட்டு ஆனையிறவு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் திருடர்களை பிடித்ததுடன், அவர்களிடமிருந்து நகையினையும் மீட்டுள்ளார்கள்.

இளைஞர்களால் துரத்திச் செல்லப்பட்டதால் A9 வீதியை விட்டு
உள் வீதியால் அவர்களால் தப்பிக்க முடியாது போயுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்ற செயலை தடுக்க உதவிய இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment