25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

இனவாத அரசியல் செய்யாதீர்கள்: கஜேந்திரன் எம்.பி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் மக்கள் போராட்டம் 5 நாட்களாக இன்று(29) இடம்பெற்று வந்த நிலையில் அதில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது. தமிழ் முஸ்லீம் மக்கள் இந்த பிரதேசத்தில் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள். இந்த கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு நான் ஒரு அன்பான அழைப்பு விடுக்கின்றேன். இங்குள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ விரும்புகின்றார்கள். எனவே முஸ்லீம் மக்களின் ஆதரவினை நாம் கோரி நிற்கின்றோம். கல்முனை தெற்கு பிரதேச செயலகம் வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான அதிகாரம் செலுத்துவதை தடுத்து நிறுத்தவற்கு உதவ வேண்டும். உங்களின் ஆதரவுடன் தான் இங்கு இன நல்லுறவினை நாம் ஏற்படுத்த முடியும். ஒரு சில அரசியல் பிரமுகர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு பிரதேச செயலகமாக செயற்படுத்த முடியாதவாறு தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி கொண்டிருப்பதானது மிகத் துரதிஸ்ட வசமானது. மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் இதை ஒரு பிரதேச செயலகமாக 1993 ஆண்டு போன்று செயற்பட விடுவதுடன் அதற்கு இடையூறாக இருக்க கூடாது தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நீங்கள் வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment