ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் உயிரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.
நேற்று (29) இரவு 7.00 மணியளவில் மஹியங்கனை – கண்டி ஏ26 வீதியில் மகாவலி ஆற்றின் வேரகங்தொட்ட பாலத்தில் இருந்து குறித்த யுவதி ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார்.
பாலத்தின் கொன்கிரீட் தடுப்பின் மேல் ஏறி ஆற்றில் குதிக்க தயாராக இருந்த குறித்த யுவதியை கண்ட அருகில் இருந்த இளைஞர்கள் குழு ஒன்று அவரை காப்பாற்ற ஓடி வந்த போது குறித்த யுவதி ஆற்றில் குதித்துள்ளார்.
பின்னர், இளைஞர்கள் குழு அவரை ஆற்றில் இருந்து மீட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதன் போது மஹியங்கனை பொலிஸாருக்கு சொந்தமான சுவசெரிய மற்றும் ஹசலக்க பொலிஸாருக்கு சொந்தமான சுவசெரிய வண்டிகளை கொண்டு வர முயற்சித்த போதும், குறித்த நோயாளர் காவு வண்டிகள் வருவதற்கு 45 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் யுவதியை ஏற்றி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
யுவதி பாலத்திற்கு வந்த சைக்கிள் மற்றும் அவரது கைப்பேசி பாலத்தின் மேல் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிசார் அவற்றை கைப்பற்றி, தொலைபேசியில் உள்ள எண்களுக்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர்.
குறித்த யுவதி சில காலமாக மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவு தெரியவந்துள்ளது.
இந்த யுவதி மினிபே 31 கால்வாய் பகுதியில் வசிப்பவராவார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.