25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
சினிமா

இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்!

பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதிலும் ரஜினியின் சிவாஜி திரைப்படம் இன்றளவும் பலரின் ஃபேவரைட் படமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் கமலின் இந்தியன், விக்ரமின் அந்நியன், அர்ஜுனின் முதல்வன் இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் வசூலிலும், விமர்சனம் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

தென்னிந்தியாவின் ஸ்டார் இயக்குநராக தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா, இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இதில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை புதுச்சேரியை சேர்ந்த ரோஹித் தாமோதரன். கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார்.

ரோஹித் தாமோதரன் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் தவறாக நடந்துகொண்டதாக இவரின் மேல் புகார் எழுப்பப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் எல்லாம் உண்மை என தெரியவந்ததும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தற்போது, உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருடன் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகியுள்ளார் ஐஸ்வர்யா. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடைபெற்றது. திருமணத்திற்கான ஏற்பாடு தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறது.

ஐஸ்வர்யா மணமுடிக்கப்போகும் தருண் கார்த்திக் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதேபோல் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகராகவும் பல திறமைகளுக்கு சொந்தக்காரர்.

இயக்குநர் ஷங்கர் தனது மனைவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வரவேற்றுள்ளார். அதேபோல் ஐஸ்வர்யாவின் முதல் திருமணத்தில் ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னணி பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார், ஷங்கர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment