26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தரமற்ற ‘மனித இம்யூனோகுளோபுலின்’ மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான ‘Ritoximap’ டோஸ்களை அரசாங்க வைத்தியசாலைகளில் பெற்று மரணமடைந்தவர்கள் அல்லது நோயாளிகளாக மாறியவர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் முதல் சந்தேக நபரான Isolate Biotech Pharma கம்பனியின் உரிமையாளரான சுகத் ஜானக பெர்னாண்டோ, டெண்டர் நடவடிக்கையின் பின்னர் மருத்துவ வழங்கல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் உரிய அளவுகளை எந்த வைத்தியசாலைகளுக்கு அனுப்பினார்? அவை என்ன வார்டுகளுக்கு கொடுக்கப்பட்டன? இந்த தடுப்பூசிகளை செலுத்திய பிறகு ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்வினையால் நோயாளி யாராவது இறந்தார்களா? யாராவது ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தார்களா? அந்த நோயாளிகளுடன் தொடர்புடைய நோயை எவ்வாறு வகைப்படுத்துவது? அது பற்றிய நிபுணர்களின் கருத்து என்ன? நோயாளிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் முகவரிகளுடன் கூடிய விரிவான பட்டியலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இரண்டு டோஸ் மருந்துகளிலும் உள்ள கரைசலில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றின் பயன்பாடு மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியதால், மருந்தை உட்கொண்டதன் காரணமாக எந்தவொரு நோயாளர் இறந்தாரா அல்லது நோய்வாய்ப்பட்டாரா என்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோர உத்தரவு பெறப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேகத்திற்குரிய இந்த இரண்டு மருந்துகளும் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் திணைக்களத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட உப குழு மற்றும் பிரதான குழுவினால் இரத்துச் செய்யப்பட்ட மருந்து பொருட்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிக்கை வழங்குமாறு மேற்படி குழுவின் தலைவருக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மனித இம்யூனோகுளோபுலின் ஊசியின் தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான மேலதிக நீதவான் விசாரணை நேற்று (28) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஒன்பது சந்தேகநபர்கள் நேற்று (28) சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஐந்தாவது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 14ஆம் திகதி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட வழக்கின் சந்தேகநபர்கள் 07 பேரின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், விசாரணை முடியும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கின் 10வது சந்தேகநபரான சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் வைத்திய வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்சன, டொக்டர் ஆரம்பகெதர ஆகியோர் பிணை உத்தரவை அன்றைய தினம் முன்வைப்பார்கள் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மூன்றாவது சந்தேக நபருக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, மருத்துவ வழங்கல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சாந்தினி சொலமன்- தனது கட்சிக்காரருக்கு சிறைச்சாலை மகளிர் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும், விசேட வைத்திய சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

சந்தேகநபரின் உடல் நிலை தொடர்பிலான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தின் பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

Leave a Comment