நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் அதை உறுதி செய்துள்ளார்.
நடிகர் சித்தார்த், கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் 2021ஆம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இருவரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால், வெளிப்படையாகக் காதலை அறிவிக்காமல் இருந்தனர். இதனிடையே, சித்தார்த்தும் அதிதி ராவும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் (27) திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது” என பதிவிட்டுள்ளார். அதிதியும் இதேபோல பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.