பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் புத்தர் படத்தை அச்சிட்ட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 முடி வெட்டும் இயந்திரங்களுடன் சந்தேகநபர் ஒருவர் ஜாஎல நகரில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில், வெள்ளி வர்ணம் பூசப்பட்ட இந்த முடி வெட்டும் இயந்திரங்களை கொள்வனவு செய்பவருக்கு, விற்பனை செய்ய காத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதான கொட்டுகொட, நடகம, தபால் பெட்டி வீதியில் வசிக்கும் நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1