இன்று (28) அதிகாலை நீர்கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். .
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் இன்று (28) காலை எட்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த கார் பிரதான வீதிக்கு அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கார் கவிழ்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார், காரின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே இவ்விபத்துக்கு காரணமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1